சந்திரயான்-3-ன் ஆட்சி முடிந்ததா
14 நாட்கள் ஓய்வின்றி உழைத்து நிலவில் உறக்க நிலைக்குச் சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை மீண்டும் எழுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. லேண்டர் மற்றும் ரோவரில் இருந்து சிக்னல்கள் பெறப்படவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிலவின் தென் துருவத்தில் கடந்த 22ஆம் தேதிதான் சூர்ய உதயம் ஆரம்பமானது. இந்த நிலையில், 14 நாட்களுக்கு முன் உறக்க நிலைக்குச் சென்ற லேண்டர், ரோவர் தற்போது மீண்டும் செயல்படாமல் உள்ளது. இதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
Tags :