நெல்லை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

நெல்லை முன்னாள் வணிக வரி துணை ஆணையர் வருமானத் திற்கு அதிகமாக ரூ.18.31 லட்சம் சொத்து குவித்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராத மும் விதித்து லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்ப ளித்தது.
நெல்லை செங்கோட் டையை பூர்வீகமாக கொண்டவர் சுந்தரம் (73). இவர் 1979ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி வணிக வரித்துறையில் இளநிலை உதவியாளராகப் பணி யில் சேர்ந்து, பின்னர் நெல்லை உதவி வணிக வரி அதிகாரி மற்றும் நெல்லைமாவட்டதுணை வணிக வரி ஆணையரா சுப் பதவி உயர்வு பெற்று, 2010ம் ஆண்டு அக்டோ பர் 31ம் தேதி ஓய்வு பெற் றார். அவர் மீது நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வருமானத் திற்கு அதிகமாக சொத்துசேர்த்ததாக வழக்குப்ப திவு செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீ சாரின் விசாரணை காலத் தில் 01.04.2000 முதல் 31.03.2010 வரை சுந்தரம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்க ளில் ரூ.26.30 லட்சம் மதிப் பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருந்தன. இந்த காலக் கட்டத்தில், அவரது வரு மானம் ரூ. 16.84 லட்சமாக வும், செலவுகள் ரூ.14.29 லட்சமாகவும் இருந்தன. இதன் மூலம், அவர் சட்ட பூர்வமாக சேமித்திருக்க வேண்டிய தொகைரூ.2.54 லட்சம் மட்டுமே. ஆனால், 10 ஆண்டுகளில் அவர் 18.31 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது வருமானத்திற்கு அதிகமாக சேர்த்தது கண்டறியப்பட் டறியப்பட் டது.
இந்த வழக்கு நேற்று நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுப்பையா முன்னி லையில் விசாரணைக்கு வந்தது. இதில் ஊழல் தடுப் புச் சட்டம் 1988, பிரிவுகள் 13(2), 13(1)(இ)ன் கீழ் சுந்தரம் குற்றவாளி என்று தீர்ப்ப ளித்த நீதிபதி சுப்பையா, அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை யும் ரூ.50,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக் கப்படும் என்றும் உத்தரவி டப்பட்டது. மேலும், வரு மானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட ரூ.18.31 லட் சம் மதிப்பிலான அசை யும் மற்றும் அசையா சொத்துக்களை மேல்மு றையீட்டு காலத்திற்குப் பிறகு அரசுடமையாக்க வும் உத்தரவிடப்பட்டது.
Tags :