செந்தில்பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை.

by Staff / 16-11-2023 11:55:45am
செந்தில்பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். நேற்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, தொடர்ந்து கால் மரத்துப்போவதாக கூறியிருந்த நிலையில், மீண்டும் ஆஞ்சியோ மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜுன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். செந்தில் பாலாஜிக்கு ஜுன்22ஆம் தேதி இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில்பாலாஜிக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

 

Tags :

Share via

More stories

Logo