3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 9 பேர் பலி
ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே ரோபட் கரீம் என்ற இடத்தில் 3 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று இருந்துள்ளது.
இந்த கட்டிடம் நேற்று இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணையில், வாயுக்கசிவு மற்றும் ஹீட்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்தது. விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :