யானைகள் நடமாட்டாம் அதிகரிப்பு; வனத்துறை அறிவுரை

ஆசனூர் அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். சத்தி புலிகள் காப்பகம் வனப்பகுதியில் புலி, மான், சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீருக்காக வனச்சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் திண்டுக்கல் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து ரோட்டோரமாக உலாவிக் கொண்டும், அங்கிருந்த செடி, கொடிகளை தின்று கொண்டும் இருந்தன.
இந்த காட்சியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக மீடியாவில் பதிவிட்டது. தற்போது வைரலாகி வருகிறது. வாகனங்களில் செல்வோர் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
Tags :