11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து பலி

by Staff / 30-05-2024 01:38:45pm
11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து பலி

சென்னை சேலையூரில் விஸ்வநாதன்- உமாதேவி தம்பதியின் அர்ச்சனா என்ற 11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரவில் பெற்றோருடன் உறங்கிய குழந்தை அர்ச்சனா எழுந்து வெளியே வந்து பக்கெட் தண்ணீரில் கவிழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து, குழந்தை உயிரிழந்தது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo