மாணவர்களுக்கு விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகளை எந்த பள்ளியும் நடத்தக் கூடாது -பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
அரையாண்டு விடுமுறை 12 நாட்கள் விடப்பட்ட நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களிடம் ,
மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பது அவர்கள் ஓய்வெடுப்பதற்கும் மனதையும் மூளையையும் புத்துணர்ச்சி பெற வைப்பதற்கு தானே தவிர.. சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு அன்று . மாணவர்களுக்கு விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகளை எந்த பள்ளியும் நடத்தக் கூடாது என்று தெரிவித்தார். பல்வேறு அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டி திறக்கப்பட்டுள்ளன என்றும் இன்னும் பல அரசு பள்ளி கட்டிடங்கள் பழுதுபார்க்கின்ற நிலையில் அவர்களுக்கு மாற்றாக வேறு இடங்களில் வாடகைக்கு கட்டடங்களை எடுத்து வகுப்புகள் நடத்தப்படும் என்றும் எந்த நேரத்திலும் மாணவர்களின் வகுப்புகள் பாதிக்கப்படாமல் இருக்குமாறு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்..அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வரும் ஜனவரி 6-ல் போராட்டம் நடத்த உள்ளது குறித்து கேட்டதற்கு பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. வரும் ஜனவரி 6ஆம் தேதிக்கு முன்பாக தமிழக முதலமைச்சர் நல்ல ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.
Tags :



















