எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் வரை அவருடன் இணைய போவதில்லை- ஓ .பன்னீர்செல்வம்

by Admin / 24-12-2025 11:41:42am
எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் வரை அவருடன் இணைய போவதில்லை- ஓ .பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் வரை அவருடன் இணைய போவதில்லை என்று முன்னாள் முதலமைச்சர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர் படை மீட்பு குழு தலைவர் ஓ .பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் முன்பு திட்டவட்டமாக தெரிவித்தார்

. கடந்த காலங்களில் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஓபிஎஸ் இனி அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப் போவதில்லை என்று தனது ஆதரவாளிடம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்து வருவதாகவும் அவருக்கு எதிர்வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவதே தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்றும் அவர் கூறியுள்ளார்

. இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுடன் இணைய மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ள ஓபிஎஸ் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகம் அல்லது திமுக ஆகியோருடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என குறிப்பிட்ட ஓபிஎஸ் ஜனவரி 2026 இன் பாதியில் தனது அடுத்த கட்ட அரசியல் வியூகங்கள் மற்றும் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமான முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories