புதிய அம்மோனியா யூரியா உரத் தொழிற்சாலைக்கு ,பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார்
நேற்று அசாம் கவுகாதியில் 4000 கோடியில் புதிய சர்வதேச முனையத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திரமோடி இன்று நம்ரூபில் 10 ஆயிரத்து 61 கோடி மதிப்பிலான புதிய அம்மோனியா யூரியா உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். 2030 ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும் இவ் உரத் தொழிற்சாலை ஆண்டிற்கு 12.7 லட்சம் மெட்ரிக் யூரியா உரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இத்தொழிற்சாலை மூலம் அசாமின் விவசாய துறையில் பெரும் மாற்றம் வளர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அசாம் அரசோடு ஆயுள் இந்தியா, தேசிய உரங்கள் லிமிடெட் மற்றும் பிற நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவாகக் கூடியதாகும். இத்தொழிற்சாலை மூலம் வடகிழக்கு இந்தியாவில் விவசாயம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எய்தும்.
Tags :


















