பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாநில சர்வதேச விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த முனையத்தைத் திறந்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள லோகப்பிரிய கோபிநாத் பர்தோலாய் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தைத் திறந்து வைத்தார். இந்த முனையம் சுமார் ₹4,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது .
திறன்: ஆண்டுக்கு 1.31 கோடி (13.1 மில்லியன்) பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. இது தற்போதைய வசதியை விட ஏழு மடங்கு பெரியதாகும். இந்தியாவின் முதல் இயற்கை கருப்பொருள் விமான நிலைய முனையமாகும்.. அசாமின் மூங்கில், ஆர்கிட் மலர்கள் மற்றும் காசிரங்கா காடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இதன் உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது..விமான நிலையத்தின் வெளியே அசாமின் முதல் முதலமைச்சர் கோபிநாத் பர்தோலாயின் 80 அடி உயரச் சிலையை பிரதமர் திறந்து வைத்தார். இந்த முனையம் வடகிழக்கு மாநிலங்களுக்கான முக்கிய நுழைவுவாயிலாகவும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விமான போக்குவரத்து மையமாகவும் செயல்படும் .
Tags :


















