இஸ்ரேல் தாக்குதல் காசா முழுவதும் 58 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்..

by Admin / 23-12-2024 09:57:57pm
இஸ்ரேல் தாக்குதல்  காசா முழுவதும் 58 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்..

இஸ்ரேல் தாக்குதல் இன்று மட்டும் காசா முழுவதும் 58க்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.. இது குறித்து ஐநா சபை தலைவர் 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மீதான தாக்குதலும் நடந்துள்ளது.   மருத்துவமனையில் ஆக்சிசன் ,குழந்தைகளுக்கு தேவைப்படும் இன்குபேட்டர் அதிகரித்திருப்பதாகவும் மருத்துவமனைக்குள் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருப்பதால் இஸ்ரேல் கட்டளையை ஏற்றுக் கொள்வது இந்த நேரத்தில் உகந்ததாக இருக்காது என்று மருத்துவமனை தரப்பு கூறியுள்ளது.

. இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் ஏற்படுத்திக் கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கபர் கிலா மீது பெரிய குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேல் தொடுத்த போரின் காரணமாக காசாவில் 45 ஆயிரத்து 317 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு ஒரு லட்சத்து 7,713 பேர் காயமடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இஸ்ரேல் தரப்பில் 1139 பேர் கொல்லப்பட்டதாகும் 200-க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர்..

 

Tags :

Share via