இன்று இஸ்ரோ அமெரிக்கா செயற்கைக்கோளை எல். வி .எம். 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது..
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ அமெரிக்காவைச் சேர்ந்த ஏ எஸ் டி ஸ்பேஸ் மொபைல் நிறுவனத்தின் ப்ளூ பேட் பிளாக் 2 என்ற பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை தனது சக்தி வாய்ந்த எல் வி எம் 3 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.. இந்தச் சாதனையின் மூலம் வணிக ரீதியான ராக்கெட் ஏவுதல் திறனை உலகிற்கு இந்தியா உணர்த்தியுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் கனமான செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் ஆற்றலை இஸ்ரோ பெற்றுள்ளது. இன்று செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள் சிறப்பு ஆண்டனாக்கள் அல்லது கூடுதல் தரை கட்டமைப்புகள் தேவையில்லாமல் நேரடியாக ஸ்மார்ட்போன்களுக்கு அதிவேக மொபைல் பிராட்பேண்ட் சேவையை வழங்கும். இந்தத் திட்டத்தின் மூலம் 4g மற்றும் 5ஜி நெட்வொர்க்குக்குகள் வழியாக குரல் வீடியோ அழைப்புகள் குறுஞ்செய்திகள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளை பெற முடியும். உலக அளவில் கனமான செயற்கைக்கோளை ஏவும் வணிக சந்தையில் இந்தியாவின் நிலைப்பாடு உறுதி உடையதாக மாறி உள்ளது.
Tags :

















