சென்னையிலிருந்து ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்.
சென்னையில் வசிக்கும் சுமார் 1 கோடி மக்களில் பெரும்பான்மையானோர் வேலை நிமித்தமாக வந்துள்ளனர். நாளை ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி மற்றும் விஜயதசமி விடுமுறையால், பலர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்காக கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். இன்று வரை சிறப்புப் பேருந்துகள் மூலம் 1 லட்சம் பேரும், சிறப்பு ரயில்கள் மூலம் 3 லட்சம் பேரும் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர்.
Tags : சென்னையிலிருந்து ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்



















