ஒரே நாளில் அதிகளவில் மழை பெய்ததால் எதிபாராத சேதங்கள் - முதல்வர் ஸ்டாலின்.

by Editor / 07-11-2021 04:44:04pm
ஒரே நாளில் அதிகளவில் மழை பெய்ததால் எதிபாராத சேதங்கள் - முதல்வர் ஸ்டாலின்.

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தர்போதுவரை பெய்த கனமழைகாரணமாக ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை வடசென்னையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.பின்னர்  செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முதல்வர் “பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் அரசு சார்பில் விரைந்து செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள்ளதாகவும்,. புரசைவாக்கம், வில்லிவாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னையில் மீட்பு பணியில் தேசிய பேரிடர் குழுவை சேர்ந்தவர்கள், காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் அனைவரும் ஒன்றினைந்து செயல்படுகின்றனர்என்றும்,

வடசென்னையில் காலையில் ஆய்விட்டத்தை தொடர்ந்து, இன்று மாலை தென் சென்னையிலும் பார்வையிட உள்ளதாகவும், சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில், அதி கனமழை பெய்துள்ளதால் பெருவாரியாக சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அப்படி மாநகரில் தேங்கியுள்ள நீர் அனைத்தும், மாநகராட்சி மூலமாக இயந்திரங்களுடன் நீக்கப்பட்டுவருகிறது. சென்னை, கரூர், திருவள்ளூர், புதுக்கோட்டை உட்பட 11 மாவட்டங்களில் 20 செ.மீ. மேல் மழை பெய்துள்ளது. தற்போதைக்கு சென்னையில் 160 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும்,. தற்போது 45 மையங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 50,000 உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,

அனைவருக்கும் உதவ அரசு தயார் நிலையில் உள்ளதாகவும், ஒரேநாளில் அதிகளவில் கனமழை பெய்துள்ளதால், இந்தளவுக்கு எதிர்பாராத சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், அரசின் முயற்சியில், விரைந்து அனைத்தும் சரிசெய்யப்படும். மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தியுள்ளதாகவும்,. வெளியூர் பயணப்படுவோர், இன்னும் இரு தினங்களுக்கு எங்கும் செல்ல வேண்டாமென மக்களிடம் அவர் கேட்டுக்கொள்வதாகவும்,மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மின்கம்பிகளை விரைந்து சரிசெய்யவும் உத்தரவிட்டுள்ளேன். இருப்பினும் மக்களும் மிகவும் கவனமாக சாலையில் நடக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via