ஏடிஎம்களில் திருடிய  கொள்ளையன் அரியானாவில்  கைது

by Editor / 25-06-2021 06:40:10pm
ஏடிஎம்களில் திருடிய  கொள்ளையன் அரியானாவில்  கைது



சென்னை எஸ்பிஐ ஏடிஎம் களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை உருவாக்கியது இதன் விளைவாக எஸ்பிஐ ஏடிஎம் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்கள் சில நாட்களுக்கு இயங்காது என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் கொள்ளையடித்தவர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது அந்த கொள்ளையர்கள் அரியானாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 கொள்ளையனை  கொண்டுசென்று பிற  கொள்ளையர்களை பிடிக்க அவனை  ஹரியானா கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது . மேலும் கொள்ளையன் அமீர் அரசை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ராயலா நகர் போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஏடிஎம் கொள்ளை கும்பலை பிடிக்க சென்னை காவல் துறையினர் தனிப்படை போலீசார் அரியானாவில் முகாமிட்டுள்ளனர். மேலும் ள்ளையன் அமீர் சென்னை கொண்டு வரப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி வரும் 8ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மற்ற கொள்ளையர்களை பிடிக்க கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறப்படுகிறது மேலும் கொள்ளை குறித்து அவரை நடிக்க வைத்து ஆதாரம் சேகரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories