தங்கம் விலை குறைவு ஏன் ?

by Editor / 24-07-2021 06:35:45pm
தங்கம் விலை குறைவு ஏன் ?

 

ஜூன் 15ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 36,608 ரூபாயாக இருந்தது.ஜூன் 19ஆம் தேதி 35,632 ரூபாயாக குறைந்து, பின்னர் ஜுன் 25ஆம் தேதி 35,480ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.


சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலை குறைவது வழக்கம். மே 31இல் இந்திய ரூபாய்க்கு எதிராக டாலரின் மதிப்பு 72.49 ரூபாயாக இருந்து ஜூன் 25இல் 74.19 ரூபாயாக அதிகரித்துள்ளது.


அமெரிக்காவில் பண வீக்கம் அதிகரித்து வருவதால், 2023இல் வட்டி விகிதங்களை இரண்டு முறை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது.அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகரித்தால், உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்கள், தங்கம் உள்ளிட்ட பல்வேறு பண்டங்களில் இருந்து அமெரிக்க டாலருக்கு தங்களின் முதலீடுகளை மாற்றிக் கொள்வார்கள். இதன் காரணமாக தங்கத்தின் விலை குறைவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். .
 

 

Tags :

Share via