by Editor /
01-07-2023
08:53:14am
மகாராஷ்டிராவில் தனியார் டிராவல்ஸ் பேரூந்து ஓன்று சம்ருத்தி நெடுஞ்சாலையில் கோர விபத்தை சந்தித்துள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் பேரூந்திலிருந்த சுமார் 25 பயணிகள் உயிரிழந்தனர். நாக்பூரில் இருந்து புனே நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. சிந்தகேதராஜா அருகே டயர் வெடித்ததில் பஸ் கவிழ்ந்தது. சாலையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பஸ்சின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் பயணிகளால் வெளியே வரமுடியவில்லை. டிரைவரும் கிளீனரும் கண்ணாடியை உடைத்து வெளியே தப்பினர். இவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்த நிலையில், தீயணைப்புத்துறையினரும் விரைந்து தீயை அணைத்தனர்.<br />
Tags :
Share via