கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராய ஊரல்களை அழித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

by Editor / 29-10-2023 11:18:27pm
கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராய ஊரல்களை அழித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ்  உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் தாரணேஸ்வரி மற்றும் கரியாலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது கெண்டிகல் கிழக்கு ஓடை மற்றும் மணியார்பாளையம் மேற்கு ஓடை ஆகிய இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 04 பேரல்களில் சுமார் 800 லிட்டர் சாராய ஊரல்களை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags : கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராய ஊரல்களை அழித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Share via

More stories