10 ஆண்டுகாலம் எதையுமே செய்யாத அ.தி.மு.க. கேள்வி கேட்கலாமா? மா.சுப்பிரமணியம் விளாசல்

by Admin / 29-07-2021 04:34:23pm
10 ஆண்டுகாலம் எதையுமே செய்யாத அ.தி.மு.க. கேள்வி கேட்கலாமா? மா.சுப்பிரமணியம் விளாசல்



10 ஆண்டுகாலமாக எதையுமே செய்யாமல்  இருந்த அதிமுக 3 மாதங்கள் கூட நிறைவைடையாத நிலையில் தங்கள் அரசை கேள்வி கேட்பது அரசியல் காழ்புணர்ச்சி என சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைகள் வளாகத்தில் அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் ஆதரவற்றோர் மன நோயாளிகளுக்கான  மீட்பு வாகனத்தை அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பின்னர் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
 
பின்னர் மூன்று அமைச்சர்களும்  கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம் , பால் விலை 3 ரூபாய் குறைப்பு, மகளிருக்கு இலவச பேருந்து சேவை, கொரோனா நிவாரண நிதி உள்ளிட்ட திட்டங்களை மூன்றே மாதத்தில் செய்தததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என கூறினார்.சென்னையில் கொரோனா பரிசோதனைகள் கூடுதலாக மேற்கொள்ளப்படுவதால் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை சற்று அதிகமாக வருகிறது எனவும் அவர் தெரிவித்தார். 

 

Tags :

Share via