திராவிடர்களின் தாய்மொழி: சீமான் விமர்சனம்

by Staff / 27-01-2023 11:44:30am
திராவிடர்களின் தாய்மொழி: சீமான் விமர்சனம்

மதுரை அவனியாபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து தென்மண்டல பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், 'இடைத்தேர்தலில் யாரையும் தோற்கடிப்பதற்காக போட்டியிடவில்லை. நாங்கள் வெல்வதற்காக தான் போட்டியிடுகிறோம். திராவிட மாடல் என்பதில் திராவிடம் என்பதே சமஸ்கிருதம். மாடல் என்பது ஆங்கிலம் அவர்கள் அப்படிதான் வளர்ப்பார்கள். அது திராவிடர்களின் தாய்மொழி, எல்லாம் ஒரு ஏமாற்றுதான்' என்றார்.

 

Tags :

Share via