இந்தியாவில் புதிதாக 4,129 பேருக்கு கொரோனா தொற்று

by Staff / 26-09-2022 11:44:10am
இந்தியாவில் புதிதாக 4,129 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 4,777ஐ விட குறைவாகும். இதனால் நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,45,72,243 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 43 ஆயிரத்து 415 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது.

 

Tags :

Share via