அண்ணாமலையார் கோவிலில் பிரபல நடிகர்கள் யோகி பாபு மற்றும் ரவி மரியா ஆகியோர் சாமி தரிசனம்.

by Editor / 07-07-2024 10:19:29am
அண்ணாமலையார் கோவிலில் பிரபல நடிகர்கள் யோகி பாபு மற்றும் ரவி மரியா ஆகியோர் சாமி தரிசனம்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பிரபல திரைப்பட நடிகர்கள் யோகி பாபு மற்றும் ரவி மரியா ஆகியோர் சாமி தரிசனம் மேற்கொண்டனர். 

பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகி பாபு புதியதாக கான்ஸ்டபிள் நந்தன் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ள நிலையில் படத்தின் பூஜைக்காக அண்ணாமலையார் கோவிலில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பட பூஜை செய்யப்பட்டது. 

இதனை தொடர்ந்து அண்ணாமலையார் கோவிலில் உள்ள சம்மந்த விநாயகர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் யோகி பாபு மற்றும் ரவி மரியா ஆகியோருக்கு மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

 

Tags : அண்ணாமலையார் கோவிலில் பிரபல நடிகர்கள் யோகி பாபு மற்றும் ரவி மரியா ஆகியோர் சாமி தரிசனம்.

Share via