கலவரத்தில் 15 வீடுகள் தீயிட்டு எரிப்பு

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்தது. இம்பால் மேற்கு மாவட்டத்தின் லாங்கோல் கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 15 வீடுகளுக்கு தீ வைத்தனர். இந்த கலவரத்தில் 45 வயதுடைய நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கலவரத்தை தடுக்க போலீசார் புகை குண்டுகளை வீசினர். இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர். தற்போது மணிப்பூரில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிகிறது.
Tags :