புதுச்சேரியில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் தீவிபத்து

by Staff / 06-05-2022 12:03:00pm
புதுச்சேரியில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் தீவிபத்து

புதுச்சேரி அருகே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திரிபுவன பாளையத்தில் செயல்பட்டு வரும் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் 20க்கும் மேற்பட்ட ஊழியர் வழக்கம்போல் பணியில் இருந்தனர் .அப்போது தொழிற்சாலையின் ஒரு பகுதியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது .உடனடியாக ஊழியர்கள் அனைவரும் வெளியேறிய சிறிது நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவி வான் உயரும் அளவில் புகை வெளியேறியது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உள்ளூர் மக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories