வால்பாறையில் தொடரும் கனமழை நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

by Editor / 28-05-2025 09:33:47am
வால்பாறையில் தொடரும் கனமழை நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால்  வாழைதோட்டம் ஆறு, நடுமலை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் காற்றுடன் பெய்த கனமழையால் நடுமலை எஸ்டேட் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தீயனைப்பு துறையினர் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் கடந்த மூன்று தினங்களாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் கொடுத்திருந்த நிலையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags : வால்பாறையில் தொடரும் கனமழை நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

Share via