51 பேருக்கு மரண தண்டனை விதித்தது காங்கோ நீதிமன்றம்

by Admin / 31-01-2022 01:32:57pm
51 பேருக்கு மரண தண்டனை விதித்தது காங்கோ நீதிமன்றம்

ஐ.நா அதிகாரிகளைக் கொன்ற வழக்கில் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்டோரை தலைமறைவானவர்கள் என தீர்ப்பு வழங்கியது காங்கோ நாட்டு ராணுவ நீதிமன்றம்.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அதிகாரிகளான மைக்கேல் ஷார்ப் என்ற அமெரிக்கரும், சைடா கேட்டலான் என்ற ஸ்வீடன் நாட்டவரும் கடந்த 2017ம் ஆண்டு திடீரென மாயமாகினர்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் ஆயுதம் ஏந்திய நபர்களால் சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டு, வயலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
 
இந்த சம்பவம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதுதொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஐ.நா. அதிகாரிகளைக் கொன்ற வழக்கில் தொடர்புடைய 51 பேருக்கு காங்கோ நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.


   


 

 

Tags :

Share via

More stories