நீண்ட இழுபறிக்கு பிறகு செர்ஜியோ மெட்டரெலா 2வது முறையாக தேர்வு

by Admin / 31-01-2022 01:53:27pm
நீண்ட இழுபறிக்கு பிறகு செர்ஜியோ மெட்டரெலா 2வது முறையாக தேர்வு

இத்தாலி அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 3ம் தேதியுடன் நிறைவடைகிறது. 

அரசியல் நெருக்கடிகளின் போது அரச தலைவர் கணிசமான அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைப்பது முதல் புதிய பிரதமர்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் பலவீனமான கூட்டணிகளுக்கான கட்டளைகளை மறுப்பது வரையிலான அதிகாரங்கள் அதிபர் பதவிக்கு உண்டு.
 
தற்போதைய ஜனாதிபதி மெட்டரெலா தனது 7 ஆண்டு பதவிக்காலத்தில் ஐந்து பிரதமர்களை கண்டுள்ளார்.

இதற்கிடையே, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இதில் 1,000 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், செனட்டர்கள் மற்றும் பிராந்திய பிரதிநிதிகளிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

புதிய அதிபருக்கான முதல் நாள் வாக்கெடுப்பில், வாக்களித்த சுமார் 1,000 எம்.பி.க்கள், செனட்டர்கள் மற்றும் பிராந்திய பிரதிநிதிகளில் 672 பேர் தங்கள் வாக்குகளை காலியாக விட்டனர்.

வெற்றியைப் பெற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்பதால் வாக்கெடுப்பு பல சுற்றுகளுக்கு நகர்ந்தது. 6 சுற்று வாக்கெடுப்புக்குப் பிறகும் எந்த முடிவும் ஏற்படவில்லை.

இந்நிலையில், எட்டு சுற்றுக்கள் முடிந்த நிலையில், தற்போதைய அதிபர் செர்ஜியோ மெட்டரெலா மீண்டும் அதிபராக வெற்றி பெற்றார். 8 சுற்றுகளின் முடிவில் செர்ஜியோ 759 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.

இத்தாலி அதிபராக மீண்டும் தேர்வாகியுள்ள செர்ஜியோ மெட்டரெலாவிற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 

 

Tags :

Share via