அதிகரிக்கும் கொரோனா 1.21 லட்சம் பேருக்கு பாதிப்பு

by Admin / 31-01-2022 12:50:55pm
அதிகரிக்கும் கொரோனா 1.21 லட்சம் பேருக்கு பாதிப்பு

உலக அளவில் 37 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 56 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. 
 
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 6-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.21 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1.17 கோடியைக் கடந்துள்ளது.
 
கொரோனா தொற்றுக்கு மேலும் 617 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 728 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு கொரோனா தொற்றில் இருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தற்போது 11 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo