கட்சி பணிகளுக்காக இருவரும் இணைந்து செயல்படுவோம்”- மல்லை சத்யா

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுலகத்தில், இன்று நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, “எனது செயல்கள் உங்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். முதன்மைச் செயலாளராக தொடர வேண்டும் என்று துரை வைகோவிடம் கூறினேன். மறுபரிசீலனை செய்து தொடர்வதாக தெரித்திருக்கிறார். இணைந்த கைகளுக்கு எப்போதும் வலிமை அதிகம். கட்சி பணிகளுக்காக இருவரும் இணைந்து செயல்படுவோம்” என்றார்.
Tags : மல்லை சத்யா