அச்சுதானந்தன் உடல் இன்று மாலை தகனம்

by Editor / 23-07-2025 04:13:51pm
அச்சுதானந்தன் உடல் இன்று மாலை தகனம்

மறைந்த கேரளா மாநில முதல்வரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தனின் உடல் இன்று மாலை 7 மணியளவில் தகனம் செய்யப்பட உள்ளது. 101 வயதான அவர் கடந்த திங்கள் கிழமை பிற்பகலில் காலமானார். திருவனந்தபுரத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், நேற்று அங்கிருந்து அவரது சொந்த ஊரான ஆலப்புழாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியபின்னர், மாலை 7 மணியளவில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
 

 

Tags :

Share via