இந்திய மாணவர் மீது தாக்குதல்..
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் ஒருவரை தாக்கியதாக சில குற்றவாளிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 19-ம் தேதி அன்று சரண்ப்ரீத் சிங் என்பவர் 5 பேரால் தாக்கப்பட்டார், இதில் அவர் சுயநினைவை இழந்தார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 'என் மனைவியுடன் வெளியே சென்றபோது, கார் பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசார் குற்றவாளிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :


















