இ -பைக்  உற்பத்தி டிசம்பரில்  தொடங்கப்படும் - தங்கம் தென்னரசு

by Editor / 01-07-2021 06:05:02pm
இ -பைக்  உற்பத்தி டிசம்பரில்  தொடங்கப்படும் - தங்கம் தென்னரசு

 

சென்னை தலைமைச் செயலகத்தில்  தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். 
அப்போது அவர், "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மின்சார வாகன உற்பத்தி மையம் இந்தாண்டிற்குள் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.இந்த உற்பத்தி மையம் உலகில் உள்ள மிகப்பெரிய மின்சார வாகன தொழிற்சாலைகளில் ஒன்றாக இருக்கும். 
இதன்மூலம், நேரடியாகவும் மறைமுகமாகவும் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.அதேபோல கடலூரில் ஹெச்.பி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படவுள்ளது. திண்டிவனம், செய்யாறில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுவது குறித்த ஆயத்தப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.பல முன்னணி நிறுவனங்கள், சர்வதேச தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வத்துடன் இருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் வரும் நாள்களில் கூடுதல் தொழிற்சாலைகள் அமைய வாய்ப்புகள் உள்ளன" என்றார்.

 

Tags :

Share via

More stories