தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோாியுள்ளது.

by Admin / 04-12-2023 02:09:33am
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோாியுள்ளது.

தெலுங்கானா தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளது .நடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க உள்ளது .ராஜஸ்தான் மாநிலத்தை இழந்த காங்கிரஸ் கட்சி தெலுங்கானா ராஷ்ட்ரிய சமாதி கட்சியிடம் இருந்து தெலுங்கானாவை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது. 119 தொகுதிகளில் அரிதி பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ் கட்சி அதன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்க தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைகோாியுள்ளாா். ஆந்திரா மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவை உருவாக்க கடுமையான போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்ற சந்திரசேகர ராவ் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியின் துணையோடு- சோனியா காந்தியின் ஆதரவோடு தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கினாா். தெலுங்கானா மாநிலம் அமைந்த பின்பு நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில்- தெலுங்கானா உருவாவதற்கு காரணமாக இருந்த சந்திரசேகர் ராவ்  கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடந்த இரண்டாவது முறையிலும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமாதி கட்சி ஆட்சியை அமைத்தது. சந்திரசேகர ராவ் மீண்டும் முதலமைச்சரானார். தெலுங்கானாவிற்கு மட்டுமே கட்சியாக இருந்த கட்சியை அகில இந்திய அளவியான கட்சியாக மாற்ற முடிவெடுத்து தெலுங்கானா என்கிற பெயரை நீக்கி ராஷ்டிரிய சமாதி என்கிற பெயரோடு தேசிய கட்சியாக அதை வடிவமைத்தார். 2024 தேர்தலில் இந்திய அளவில் போட்டியிட்டு தம் கட்சியை தேசிய அளவில் வளர்க்கத் திட்டமிட்ட சந்திரசேகராவிற்கு தம் சொந்த மாநிலத்திலேயே பதவியை இழக்க கூடிய ஒரு சூழல் உருவானது அதோடு மட்டுமில்லாமல் எம்எல்ஏ பதவியையும் அவர் பறி கொடுக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையில், வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via