சென்னை சென்ட்ரல், கத்திப்பாரா, போரூரில் ரூ. 61,843 கோடி செலவில்‘மெட்ரோ’ ரெயில் பணிகள்: 

by Editor / 08-10-2021 05:15:22pm
சென்னை சென்ட்ரல், கத்திப்பாரா, போரூரில் ரூ. 61,843 கோடி செலவில்‘மெட்ரோ’ ரெயில் பணிகள்: 

சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணாசாலை, சென்ட்ரல் வழியாக திருவொற்றியூர் விம்கோநகர் வரை ஒரு வழித்தடத்திலும், மற்றொரு மார்க்கமாக விமான நிலையத்தில் இருந்து ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், எழும்பூர், சென்ட்ரல் வழியாக திருவொற்றியூர் விம்கோ நகருக்கு ரெயில்கள் சென்று வருகின்றன.


மொத்தம் 45 கி.மீட்டர் தூரத்துக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 23 கி.மீட்டர் தூரம் சுரங்கத்திலும், 22 கி.மீட்டர் வழித்தடம் மேம்பாலம் வாயிலாகவும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. 119 கி.மீ. 3 வழித்தடம்


சென்னை மெட்ரோ ரெயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடம் (45.8 கி.மீ), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச் சாலை வரையிலான வழித்தடம் (26.1 கி.மீ) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடம் (47.0 கி.மீ), என மொத்தம் 118.9 கி.மீ நீளத்திலான 3 வழித்தடங்களை ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் ரூ.389.42 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய சதுக்கத் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) / சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ், இயக்குநர்கள் டி. அர்ச்சுனன் (திட்டங்கள்), ராஜேஷ் சதுர்வேதி (இயக்கம் மற்றும் பராமரிப்பு) மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தார்கள்.
 

 

Tags :

Share via