சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - முதியவர் கைது

by Staff / 23-12-2022 01:27:26pm
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - முதியவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே அப்பட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜன் (60). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பேரப்பிள்ளைகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20 ம் தேதி  இவரது வீட்டு பக்கம் 4 ம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுமி கடைக்கு சென்று விட்டு சந்து வழியாக திரும்பி வரும்போது செல்வராஜன் சிறுமியின் கையை பிடித்து இழுத்து, அவரது வீட்டு கட்டிலில் படுக்க வைத்து பாலியல் தொந்தரவு செய்தாராம். இது குறித்து சிறுமியின் தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். டி. எஸ். பி. தங்கராமன் சிறுமி மற்றும் செல்வராஜனிடம் விசாரணை நடத்தினார். பின்னர் சிறுமி கூறியதின் அடிப்படையில் செல்வராஜன் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதி: போக்சோ பிரிவில் கைது செய்யப்பட்ட செல்வராஜன் ஏற்கனவே உடல் நிலை பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குளச்சல் மகளிர் காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட செல்வராஜன் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செல்வராஜன் போலீஸ் பாதுகாப்பில் இருந்து வருகிறார்.

 

Tags :

Share via
Logo