உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த சிறுவன் அடித்து கொலை

by Staff / 21-03-2022 03:25:21pm
உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த சிறுவன் அடித்து கொலை

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலிகிரி மண்டலம் அட்டவாரிபள்ளியை சேர்ந்தவர் உதய் கிரண் (வயது 8). இவர் அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
 
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அங்குள்ள மரத்தில் மர்மமான முறையில் சிறுவன் தூக்கில் பிணமாக தொங்கினார். கலிகிரி போலீசார் சிறுவனின் உடலை பரிசோதனை செய்த போது சிறுவனை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சிறுவனின் உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த சகாதேவன், ராஜேஸ்வரி ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கள்ளக்காதலர்களான இவர்கள் இருவரும் சம்பவத்தன்று வீட்டில் உள்ள அறையில் உல்லாசமாக இருந்தனர். இதனை சிறுவன் உதய்கிரண் நேரில் பார்த்து உள்ளான்.

இதை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என கள்ளக்காதல் ஜோடி சிறுவனை மிரட்டியுள்ளனர். அதற்கு சிறுவன் மறுத்ததால், சிறுவனின் மர்ம உறுப்பில் பலமாக தாக்கினர். பின்னர் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.

கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலை யாருக்கும் தெரியாமல் நள்ளிரவு எடுத்துச் சென்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மரத்தில் தொங்க விட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சகாதேவன், ராஜேஸ்வரியை கைது செய்தனர்.

உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via

More stories