கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறும் கல்லூரி சந்தை - மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனைகண்காட்சி

by Admin / 09-08-2023 01:12:09pm
 கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறும் கல்லூரி சந்தை - மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனைகண்காட்சி

 தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் திண்டுக்கல் எம்.வி.எம்.அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறும் கல்லூரி சந்தை - மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர்  மொ.நாபூங்கொடி, அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் மகளிர் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் பொருளாதார நிலையில் தன்னிறைவு பெற்று, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காக மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு சுயதொழில் தொடங்கிட வழிவகை செய்யப்பட்டு வருகிறது . மேலும், கூட்டாக தொழில் தொடங்கிட வழிவகை ஏற்படுத்தும் வகையில், தொழில் கடனுதவி கள். மானியக்கடனுதவிகள், சுழல்நிதி உள்ளிட்ட நிதியுதவிகள் வழங்கப்படுகிறது.

கால மாற்றத்திற்கேற்ப புதிய வகையிலான பொருட்கள் தயாரிப்பது மற்றும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் பயிற்சி அளி க்கப்படுகிறது. உணவு தொடர்பான தொழில்கள் மூலம் எப்போதுமே நல்ல முன்னேற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. தொழில் வாய்ப்புகள் குறித்தும், அரசின் கடன் திட்டங்கள் குறித்தும், மகளிர் சுய உதவிக்குழுவினர் அறிந்து அவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் குறித்து அனைவரும் அறிந்து அவைகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கும் வகையில் சந்தைப்படுத்துவதை ஊக்கப்படுத்திடும் வகையில் இதுபோன்ற கண்காட்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக் கும் பொருட்களை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி விற்பனை மேற்கொள்ளப்படுவதால் உள்ளூரில் சந்தை வாய்ப்பு கிடைப்பதுடன், போக்குவரத்து சிரமங்கள் தவிர்க்கப்படுகிறது

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தைஉயர்த்திடும் வகையில் மகளிர் திட்டப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதிக அளவிலான சுய உதவிக் குழுக்களை இணைத்து . சுழல் நிதிகளை அவர்களுக்கு பெற்று வழங் கப்பட்டு வருகிறது. வங்கிகள் மூலம் தொழில் கடனுதவிகள் வழங்கப்படுகிறது

மேலும் மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் குறித்து அனைவரும் அறிந்து அவைகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கும் வகையில் சந்தைப்படுத்துவதை ஊக்கப்படுத்திடும் வகையில் இதுபோன்ற கண்காட்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக் கும் பொருட்களை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி விற்பனை மேற்கொள்ளப்படுவதால் உள்ளூரில் சந்தை வாய்ப்பு கிடைப்பதுடன், போக்குவரத்து சிரமங்கள் தவிர்க்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழை . எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடும் வகையில் மகளிர் திட்டப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது . அதிக அளவிலான சுய உதவிக் குழுக்களை இணைத்து . சுழல் நிதிகளை அவர்களுக்கு பெற்று வழங் கப்பட்டு வருகிறது வங்கிகள் மூலம் தொழில் கடனுதவிகள் வழங்கப்படுகிறது.கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மாநில் ஊரக மற்றும்நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கல்லூரி சந்தைமகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை மற்றும்கண்காட்சிதிண்டுக்கல் எம்.வி.எம்.அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று(09.08.2023) முதல் 11.08.2023 வரை கண்காட்சி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறவுள்ளது. கண்காட்சியில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 25 மகளிர் சுய உதவிக்குழுக்களும், மதுரை, விருதுநகர், தேனி மற்றும் சிவகங்கை போன்ற வெளி மாவட்டங்களிலிருந்து 5 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் என மொத்தம் 30சுய உதவிக்குழுவினர் தங்களது உற்பத்தி மற்றும் மண்பாண்ட கைவினைப்பொருட்கள், சின்னாளபட்டி சேலைகள், வீட்டு உபயோகப்பொருட்கள்,மென்பொம்மைகள், கவரிங் பொருட்கள் விற்பனைக்கு வைத்திடும் வண்ணம் உரியஅரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் அதிகளவில் இக்கண்காட்சியை பார்வையிட்டு பொருட்களை வாங்கி உள்ளூர் மகளிர் சுயஉதவிக்குழுவினரை ஊக்கப்படுத்திட வேண்டும். இதன்மூலம் மகளிரின் வாழ்வாதாரம் உயந்திட வழிவகை ஏற்படும். என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் நா.சரவணன், எம்.வி.எம். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் தே இலட்சுமி, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் .பெ.வேல்முருகன், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

 

 கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறும் கல்லூரி சந்தை - மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனைகண்காட்சி
 

Tags :

Share via