பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் மேற்கொண்டார். ராமானுஜர், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார் மண்டபத்தில் பிரதமர் மோடி தரிசனம் செய்துவிட்டு கோவில் யானையிடமும் ஆசி பெற்றார். யானை ஆண்டாளுக்கு பழங்களையும் வழங்கி அதனை தடவிக் கொடுத்தார். பாரம்பரிய உடை அணிந்து வந்துள்ள பிரதமருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, காயத்ரி மண்டபத்தில் நின்று ரங்கநாதரை தரிசனம் செய்தார். ஆன்மிக பயணமாக தமிழகம் வந்துள்ள மோடி, இன்று பிற்பகலில் ராமேஸ்வரம் செல்லவுள்ளார்.
Tags :