கள்ளக்குறிச்சியில் களமிறங்குகிறார் எல்.கே.சுதீஷ்..

by Staff / 20-01-2024 12:29:35pm
கள்ளக்குறிச்சியில் களமிறங்குகிறார் எல்.கே.சுதீஷ்..

எதிர்வரும் மக்களவை தேர்தலில் தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 28ஆம் தேதி காலமானார். இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் துணை பொதுச் செயலாளரும், விஜயகாந்தின் மைத்துனருமாக எல்.கே.சுதீஷ் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. தேமுதிக, இந்த முறை பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரிய நேரத்தில் அறிவிப்பார் என தெரிகிறது.

 

Tags :

Share via