10 இடங்களில் வருமான வரி சோதனை

by Staff / 20-01-2024 12:43:12pm
10 இடங்களில் வருமான வரி சோதனை

சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.கரோனா காலத்தில் வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் தயாரிப்புக்காக மூலப்பொருட்கள் இறக்குமதி செய்ததில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, கன்வர்லால் குழுமத்துக்குச் சொந்தமான மருந்து தயாரிப்பு நிறுவனம், மருந்து மொத்த கொள்முதல் நிறுவனங்களில் நேற்றுவருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.ஏற்கெனவே, கடந்த அக்டோபர் மாதம் இந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இதே புகாரில் வருமானவரித் துறை 3 நாட்கள் சோதனை நடத்தியது. இந்நிலையில், 2-வது முறையாக நேற்று அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. சவுகார்பேட்டையில் உள்ள அந்நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, அலுவலகங்கள், மாதவரத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via