திராவிட இளைஞர் படையின் வலிமை - அன்பில் மகேஷ் ட்வீட்

by Staff / 20-01-2024 01:25:50pm
திராவிட இளைஞர் படையின் வலிமை - அன்பில் மகேஷ் ட்வீட்

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட இளைஞர் படையின் வலிமையை இந்திய ஒன்றியத்திற்கு உரக்கச் சொல்வோம் உன அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ''எங்களை வளர்த்தெடுத்த கழக இளைஞர் அணி "மாநில உரிமை மீட்பு" முழக்கத்தோடு இரண்டாவது மாநில மாநாட்டிற்கு தயாராகியுள்ளது. கழகத் தலைவர் வழிகாட்டுதலின்படி நடைபெறவிருக்கும் மாநாட்டில் ஒன்றுகூடுவோம். பாதுகாப்புடன் வாருங்கள்! "கடமை கண்ணியம் கட்டுப்பாடு" பின்பற்றி மாநாட்டில் பங்கேற்போம்'' என கூறியுள்ளார்.

 

Tags :

Share via