டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி

by Staff / 05-06-2023 04:37:14pm
டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பயங்கர விபத்து நடந்துள்ளது. இன்று (ஜூன் 05) வத்திசெருகூர் அருகே தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 தொழிலாளர்கள் காயமடைந்தனர். விபத்தின் போது டிராக்டரில் 40 தொழிலாளர்கள் இருந்ததாக தெரிகிறது. காயமடைந்தவர்கள் குண்டூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை உயரம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo