“தேர்தல் முடிந்த உடன் கட்டாயம் நடவடிக்கை”

by Staff / 27-05-2024 05:18:11pm
“தேர்தல் முடிந்த உடன் கட்டாயம் நடவடிக்கை”

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய அவர், “தேர்தலில் பணியாற்றியவர்கள் குறித்த விவரங்கள் எனக்கு தெரியும். தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நிர்வாகிகள் வைக்கும் அனைத்து புகார்களும் உண்மை தான். தேர்தல் முடிவுக்கு பிறகு கீழே இருப்பவர்கள் மேல போகலாம், மேலே இருப்பவர்கள் கீழே வரலாம்” என்றார். மேலும், “இந்த தேர்தல் முடிவில் எத்தனை இடங்களில் வெற்றி என்பது முக்கியம் இல்லை. எவ்வளவு வாக்கு என்பது தான் முக்கியம்” என்றார்.

 

Tags :

Share via