சவுக்கு சங்கர் ஜாமின் கோரிய வழக்கு: மே 30 க்கு ஒத்திவைத்து

by Staff / 27-05-2024 05:22:19pm
சவுக்கு சங்கர் ஜாமின் கோரிய வழக்கு: மே 30 க்கு ஒத்திவைத்து

பிரபல யூடியுபர் சவுக்குசங்கர் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது தனது அறையில் கஞ்சா வைத்திருந்ததாக PC பட்டி காவல்துறை தரப்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜூன் -5ஆம் தேதிவரை நீதிமன்ற காவலை நீடித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் இந்த வழக்கில் சவுக்கு சங்கர் தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவானது இன்று மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக விசாரணைக்கு வந்தது.அப்போது சவுக்குசங்கர் தரப்பில் நீதிமன்றத்தில் கால அவகாசம் கோரிய நிலையில் ஜாமின் கோரிய வழக்கு விசாரணையை வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.கஞ்சா வைத்திருந்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்க கூடாது என கூறி குறிஞ்சியர் பெண்கள் ஜனநாயக பேரவை பவானி தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

 

Tags :

Share via