காதலை மறுத்த பெண் கொலை

by Staff / 23-10-2022 12:48:57pm
காதலை மறுத்த பெண் கொலை

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் வாழ்யாயில் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுபிரியா (21). இவரும் மனந்தரி பகுதியை சேர்ந்த ஷம்ஜித்(25) என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஷம்ஜித் உடனான காதலை விஷ்ணுபிரியா முறித்துக்கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று விஷ்ணு பிரியா வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து ஷம்ஜித், வீட்டிற்குள் புகுந்து அவரை கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான். விஷ்ணு பிரியாவின் உடலில் மொத்தம் 18 இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. வெளியூர் சென்ற பிரியாவின் தாயார் வீட்டிற்கு வந்து பார்த்த போது, மகள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் ஷம்ஜித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo