சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்

by Staff / 14-02-2024 01:44:45pm
சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்

காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற கட்சி தலைவருமான சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக வேட்புமனு தாக்கல் செய்தார். கட்சித் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன், காலையில் ஜெய்ப்பூரை அடைந்த அவரை முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் ஆகியோர் வரவேற்றனர். தற்போது, உ.பி.யின் ரேபரேலி தொகுதி மக்களவை உறுப்பினராக இருக்கும் அவர், வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. அதனால், மாநிலங்களவைக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்த முறை அவரது தொகுதியான ரேபரேலியில், மகள் பிரியங்கா காந்தி களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo