அடுக்குமாடி குடியிருப்பு மின்கட்டணத்தை குறைக்க வேண்டுகோள்
சென்னை பெயரளவுக்கு குறைக்கக் கூடாது என்றும், அடுக்குமாடி குடியிருப்பு பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 10 வீடுகளுக்கும், 3 மாடிகளுக்கும் குறைவாக உள்ள, மின் தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் ஓர் அலகுக்கு 8 ரூபாயிலிருந்து ரூ. 5. 50 ஆக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார். அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் எதிர்பார்ப்புகளில் சிறிய அளவைக் கூட நிறைவேற்றாத இந்த அறிவிப்பால் எந்த பயனும் இல்லை. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மின்கட்டணம் மக்களின் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்து மக்களை ஓரளவாவது காப்பாற்ற, அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை ஏற்கனவே இருந்த அளவுக்கு குறைக்க வேண்டும். முன்பு வழங்கப்பட்டதைப் போல பொதுப்பயன்பாட்டுக்கும் 100 அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Tags :