முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ காலமானார்!

by Editor / 26-05-2021 11:40:17am
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ காலமானார்!

கோவையைச் சேர்ந்த கே.பி.ராஜு 1991-1996 காலகட்டத்தில் கோவையில் அதிமுக எம்.எல்.ஏ.,வாகவும் பதவி வகித்துள்ளார்.மேலும், கோவை மாவட்ட பால்வள ஒன்றிய தலைவர், அவைத்தலைவர், முன்னாள் தமிழ் நாடு பஞ்சாலை அமைப்பின் தலைவர், முன்னாள் மாவட்ட கழக செயலாளர், உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர். இந்நிலையில் சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கே.பி.ராஜு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும்,அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo