பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு -எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

by Editor / 04-01-2025 04:46:08pm
பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு -எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். முறையான பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளாமல் திமுக அரசு மெத்தனம் காட்டியதே இந்த விபத்துக்கு காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “பட்டாசு ஆலை பாதுகாப்பில் தொடர்ந்து மெத்தனப் போக்கில் திமுக அரசு செயல்படுகிறது. இனி வரும் காலங்களில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

 

Tags : பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு -எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

Share via