ஆலய வாயிலில் தீவைத்த வாலிபரால் பரபரப்பு.

by Editor / 04-01-2025 03:23:12pm
ஆலய வாயிலில் தீவைத்த வாலிபரால் பரபரப்பு.

தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற ஆலயமாக கருதப்படும் தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வரும் ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பராமரிப்பு பணிகள் மற்றும் கோபுரங்களுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள்  நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று தென்காசி காசி விசுவநாதர் ஆலயம் அன்பு காலையில் .நபர் ஒருவர் திடீரென தலையில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு உடம்பில் தீவைக்க முயற்சி மேற்கொண்டுஅங்கு ஓடுவதை கண்ட ஆலய பணியாளர்கள் உடனடியாக அவரை மீட்டனர்.அவரது கையிலிருந்த பெட்ரோல் கேனை தட்டினார்.இதனிலிருந்து பெட்ரோல் ஆலய முன்பகுதியில் கொட்டிய நிலையில் அந்தநபர் தற்கொலைக்கு முயன்றநிலையில் அவரது கையிலிருந்த தீ க்குச்சி யை அவர் வீசியதில்  ஆலயத்தின்முன்பகுதியில் கூட்டிய பெட்ரோலில் தீப்பற்றி எரியத்தொடங்கியது.தகவல் அறிந்து உடனடியாக விரைந்து சென்ற தென்காசி போலீசார் அவரை மீட்டு தென்காசி காவல் நிலையத்திற்கு அழைத்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆலயத்தினுடைய பாதுகாப்பும் கேள்விக்குறி எழுந்துள்ளது கூடுதல் போலீசார் ஆலயத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.இந்த முயற்சியில் ஈடுபட்டவர் கடையம் பகுதியை சேர்ந்த பாலன் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

 

Tags : ஆலய வாயிலில் தீவைத்த வாலிபரால் பரபரப்பு.

Share via